கீரமங்கலம்,வடகாட்டில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. மழையுடன் இடி விழுந்த அதிர்ச்சியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் பலியானார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இன்றுமாலை கன மழை பெய்தது. வடகாடு பகுதியில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது. இதனால்சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரங்கள் சாலைகளில் சாயவில்லை என்பதால் போக்குவரத்து பாதிப்பு இல்லை.

Advertisment

death

இந்த நிலையில் வடகாடு தெற்குபட்டியை சேர்ந்த குழந்தையன் மனைவி நாடியம்மாள் (45). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தனது வீட்டில் நின்ற ஆடுகளை மேய்ச்சலுக்காக இன்றுஅய்யனார் கோயில் குளம் உள்ள பகுதிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றுள்ளார்.

அப்போது அருகில் பலத்த சத்தத்துடன் இடி விழுந்ததால் நாடியம்மாள் மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வடகாடு அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் நாடியம்மாள் இறந்துவிட்டார். அதனால் நாடியம்மாளின் சடலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து வடகாடு போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர். இடி விழுந்த அதிர்ச்சியில் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.