திருச்சியில் காதலனை நம்பிச் சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம்சிறுமருதூர்கிராமம் பகுதியைச் சேர்ந்தவர்சிலம்பரசன். இவர் கல்லூரி மாணவி ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்தனியாகபேச வேண்டும்எனகாதலியைசிலம்பரசன்அழைத்துச் சென்றுள்ளார். திருச்சி மாருதி நகர்ப் பகுதியில் அமைந்துள்ளசிலம்பரசனின்நண்பனின் வீட்டில் வைத்து கல்லூரிமாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைவீடியோவாகஎடுத்து வைத்துக் கொண்டசிலம்பரசன்வார இறுதி நாட்களில் வீடியோவைகாட்டி மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்துள்ளான். தொடர்ந்து கர்ப்பமடைந்த கல்லூரி மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளையும்சிலம்பரசன்வாங்கி கொடுத்துள்ளான். இந்தச் சம்பவம்தொடர்பாகதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தாயுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்துபோலீசார்நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளது.