Advertisment

இளம் பெண்ணை ஏமாற்றிய வாலிபர் 'போக்சோ'வில் கைது!

Woman who  complaint at the police station .. Police arrested under the Pokso Act ..!

Advertisment

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ளது நாவர்குளம். இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்ணும்(19) புதுச்சேரி மாநிலம் முத்திரை பாளையத்தைச் சேர்ந்த ஜான் விக்டர் மகன் அல்போன்ஸ் (25) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்.23ஆம் தேதி, தனது காதலி வீட்டிற்குச் சென்ற அல்போன்ஸ், திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆசைவார்த்தைகூறி, அவரது ஆசைக்கு இணங்கவைத்து அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அதன்பிறகு, அந்தப் பெண், அல்போன்ஸிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு பலமுறை கேட்டுள்ளார்.

ஆனால், அல்போன்ஸ் தனக்கு வேறு ஒரு பெண்ணுடன்நிச்சயமாகியுள்ளதாகக் கூறி அந்தப் பெண்ணுடன் பேசுவதைநிறுத்திவிட்டார். தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண் இதுகுறித்து,கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், தீவிர விசாரணை செய்தனர். பின், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகூறி பெண்ணை ஏமாற்றிய அல்போன்ஸ் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அல்போன்ஸைகைது செய்துள்ளனர்.

POCSO villupuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe