The woman who came to the district collector's office caused a stir

Advertisment

பெண் ஒருவர் நீதி கேட்டு கழுத்தில் கத்தியை வைத்தபடி கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு போலீசார் குவிந்தனர்.

கோவையில் நிலத் தகராறு காரணமாக பேரூர் காவல் நிலையத்தில் மரகதவல்லி என்ற பெண் ஒருவர் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை எனத்தெரிவித்து கோவை ஆட்சியர் அலுவலகம் இருக்கும் பகுதிக்கு வந்தார். அப்பொழுது கையில் வைத்திருந்த பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தன்னுடைய கழுத்து பகுதியில் வைத்தபடி கூச்சல் எழுப்பத்தொடங்கினார்.

இதனால் அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உடனடியாக ஓடிச் சென்று அவர் கையிலிருந்து கத்தியைப் பிடுங்கினர். பின்னர் அவரிடம் விசாரித்ததில், நிலத் தகராறில் என்னை முடியைப் பிடித்து அடித்தார்கள். நான் பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் நடு ரோட்டில் தற்கொலை செய்து கொள்கிறேன் என சொன்னதற்கு செத்தால் பரவாயில்லை என்று சொல்கிறார்கள்' என நிலத்தகராறு தொடர்பான ஆவணங்களை அங்கிருந்தஅதிகாரிகளிடம் காண்பித்தார்.

Advertisment

மீண்டும் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு குண்டுக் கட்டாக போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.