Advertisment

கழிவுநீர் சென்ற விவகாரம்; மூதாட்டியை அடித்து கொன்ற பெண்!

woman who beat the old woman to passed away in of sewage

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் தவசிக்கண்ணு(64). இவருக்குத் திருமணம் ஆகாமல் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் சண்முகசாமி - துரைச்சி(54) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் துரைச்சிக்கும், தவசிக்கண்ணுவிற்கும் இடையே வீட்டின் முன் கழிவுநீர் செல்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Advertisment

அந்த வகையில் நேற்று காலை வீட்டின் முன் கழிவுநீர் செல்வது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்ற ஆத்திரமடைந்த துரைச்சி, தவசிக்கண்ணுவை கீழே தள்ளி, கல்லால் தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்து மயங்கி விழுந்த தவசிக்கண்ணுவை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மயங்கிக் கிடந்த தவசிக்கண்ணுவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி தவசிக்கண்ணு உயிரிழந்தார்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் துரைச்சியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

woman police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe