Advertisment

மகனுக்கு துணி எடுக்க சென்ற மனைவி...கடைசியாக சென்ற போன்...வெளிவந்த அதிர்ச்சி தகவல்! 

திருச்செங்கோடு பகுதியில் மகனின் பிறந்த நாளுக்கு துணி எடுக்க சென்ற பெண் மர்மமான முறையில் இறந்தது பெரும் பரபரப்பாகியது. தற்போது அந்தப் பெண் இறப்பில் புதிய தகவல் கிடைத்துள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்செங்கோடு இறையமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் சோபனா. இவரது கணவர் செந்தில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு சச்சின், தேவா என்ற இரு மகன்கள் உள்ளனர். ஷோபனா திருச்செங்கோடில் தனது உறவினர் ஒருவரின் பியூட்டி பார்லரை நடத்தி வருகிறார்.

Advertisment

incident

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி ஷோபனா பியூட்டி பார்லரில் இருந்து வழக்கமாக வரும் நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது கணவர் பதற்றம் அடைந்துள்ளார். பின்பு தனது கணவருக்கு சோபனா போன் செய்துள்ளார். போன் செய்து மகன் பிறந்த நாளுக்கு துணி எடுக்க வந்தேன் கூறியுள்ளார். பின்பு கடைசி பேருந்தை மிஸ் செய்துவிட்டேன். அதனால் நண்பர் கூட காரில் வருகிறேன் என்று தனது கணவருக்கு தெரிவித்துள்ளார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் பயந்து போன கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது பற்றி விசாரித்த போலீஸாருக்கு பெரும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது, மறுநாள் காலையில் புள்ளிப்பாளையம் எனும் பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்து இறந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அப்போது அந்த உடலை கைப்பற்றிய போலீஸார் அந்த பெண் சோபனா என்று அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சமபவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலையாளி யார் என்பது குறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சோபனா இறப்பில் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரின் செல்போனை கைப்பற்றி கடைசியாக யாருக்கு போன் செய்துள்ளார் என்று பார்த்துள்ளனர். அதில் கடைசியாக ஷோபனா கணேஷ்குமார் என்பவரை அழைத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவரது செல்போனில் கணேஷ்குமாரின் புகைப்படங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கணேஷ் குமார் யார் என்பதும் அவருக்கும் ஷோபனாக்கும் முறையற்ற உறவு ஏதேனும் இருந்ததா எனவும் விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

incident issues family wife husband Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe