woman was thrown when the car went out of control and entered the restaurant

வேலூர் அடுத்த பென்னாத்தூர் பகுதியைச்சேர்ந்தவர் பழனி. இவர் அதே பகுதியில் சாலையோரம் சிறிய அளவில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு மதியம் 2 மணியளவில் பென்னாத்தூர் நோக்கி கார்த்திக் என்பவர் வேகமாக கார் ஓட்டி வந்துள்ளார். குடும்பத்தோடு நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு வந்துள்ளார். அந்த கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பழனியின் உணவகத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது அங்கு வேலை செய்துகொண்டிருந்த பெண் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தவர் மூர்ச்சையாகிப் போனார்.

Advertisment

அங்கு சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள், அக்கம்பக்க கடைக்காரர்கள் பொதுமக்கள் ஓடிவந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அடிப்பட்ட பெண்மணியை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்து வந்த வேலூர் தாலுக்கா காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், காரை ஓட்டிவந்த கார்த்திக் என்பவர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும் எதிரே இருந்த வேகத்தடையை கவனிக்காமல் காரை வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.