Advertisment

மணல் கொள்ளையை தடுத்த பெண் வி.ஏ.ஓ;கொலைவெறி தாக்குதல் நடத்த முயன்றவர் கைது !

கடந்த மாதத்தில் திருச்சி மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஓவர் லோடு மணல் லாரியை தடுத்த ஆர்.ஐ. ஆளும்கட்சி பிரமுகர் கொலைவெறி தாக்குதல் நடந்தி கொலைமிரட்டல் விடுத்ததும் உயிருக்கு பயந்து போலில் புகார் செய்தும் அமைச்சர் வளர்மதியின் சிபாரிசில் கடைசி வரை கைதிலிருந்து தப்பித்து கடைசியில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.

Advertisment

இதை தொடர்ந்து தற்போதுதிருச்சி மாவட்டத்தின் எல்லைப்பகுதியான தொட்டியம் அருகே பெரியபள்ளிபாளையத்தில் மணல் கொள்ளை தடுத்த பெண் வி.ஏ.ஓவைதாக்க முயன்றவர் கைதுசெய்யப்பட்டார்.

Advertisment

SAND

தொட்டியம் அருகே உள்ள பெரியபள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் விமலாதேவி. இவர் பெரியபள்ளிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மணல் திருட்டை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டும், மணல் திருட்டு குறித்து அவ்வப்போது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.தற்போது காவிரியில் தண்ணீர் பெருவெள்ளமாக ஓடி முடிந்த நிலையில் கிளை ஆறுகளில் தண்ணீர் இல்லாதாதால் மீண்டும் மணல் கொள்ளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியபள்ளிபாளையம் காவிரி ஆற்றுப்பகுதியில் திருடிசெல்வதற்காக சாக்கு மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை ரோந்து பணியில் கண்டுபிடித்த விமலாதேவி அனைத்து மூட்டைகளையும் கத்தியால் கிழித்து மணலை மூட்டைகளில் திருடி செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பெரியபள்ளிபாளையத்தை சேர்ந்த தங்கமணி என்பவர் மகன் அரவிந்த் என்ற வாலிபர் விஏஓ விமலாதேவியிடம் ஆற்றில் மணல் எடுப்பதை எப்படி தடுக்கலாம் எனக்கூறி கோபமாக அவரை தாக்க முயன்றிருக்கிறார். அவர் தாக்க வந்தலில் தப்பித்த விஏஓ விமலாதேவி காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.திருச்சியில் மணல் கொள்ளைக்கு பல்வேறு மட்டத்திலும் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதும் விமலாதேவி போன்று நேர்மையான அதிகாரிகளை மணல் கொள்ளையர்கள் மிரட்டுவது வாடிக்கையாக கொண்டே இருக்கிறது.

attack police sand VAO
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe