ADVERTISEMENT

தனிமைச்சிறையிலிருந்து ஆம்புலன்ஸில் தப்பிக்க முயன்ற பெண்... வழக்குப்பதிவு செய்த போலீஸ்!

05:12 PM Mar 30, 2020 | kalaimohan

வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய பெண் தன்னுடைய இரு குழந்தைகளுடன் போலீஸாரை ஏமாற்றி ஆம்புலன்ஸ் மூலம் விராலிமலையிலிருந்து ராமநாதபுரத்திற்கு செல்ல முயற்சிக்கையில், ஆம்புல்ன்ஸை விரட்டி சேஸிங் செய்து மடக்கி பிடித்து மூவரையும் தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் திருவாடனை உட்கோட்டப் போலீசார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தொற்று நோய்க் காரணமாக வெளிநாட்டினர், வெளிநாட்டிலிருந்து திரும்பியோர், அவர்களுடனான தொடர்பிலிருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து தங்களது மருத்துவ பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளன மத்திய மாநில அரசுகள். மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்ட கண்காணிப்பு போக, ஏனையோர் அவர்களுடைய வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவக் கண்காணிப்பின் காலமாக 28 நாட்களிலிருந்து 14 நாட்கள் வரை என வரையறைப்படுத்தியுள்ளது அரசு. இது இப்படியிருக்க, மருத்துவக்கண்காணிப்பிலுள்ள சிலர், கரோனா பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவ கெடுபிடிகளுக்கு பயந்து எஸ்கேப்பாகியதும் உண்டு. இந்நிலையில், 28ம் தேதி இரவில் சிவகங்கை - ராமநாதபுர மாவட்ட எல்கையான கருமொழி சோதனை சாவடியில் ராமநாதபுர மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவின் இன்ஸ்பெக்டர் இளவேனில், திருவாடனை காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ.சுல்தான் இப்ராஹிம் மற்றும் திருப்பாலைக்குடி காவல்நிலையத்தினை சேர்ந்த போலீஸ் முத்து ஆகியோர் பாதுகாப்பில் இருந்தபொழுது TN55-BB-8448 என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற ஆம்னி வகை ஆம்புலன்ஸை சோதனைக்காக நிறுத்தியுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக விராமலையிலிருந்து ராமநாதபுரம் ஒருவரும், திருச்சியிலிருந்து ராமநாதபுரம் ஆம்புலன்ஸிலுள்ளவர்கள் முன்னுக்குப் பின் முரணாக கூறிக் கொண்டிருந்த வேளையில், " அது டிஎஸ்பி-க்கு சொந்தமான வண்டி" என டிஎஸ்பி அலுவலகத்திலிருந்து ஒருவர் பேசுவதாக எஸ்எஸ்ஐ-க்கு தகவல் வர, அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அடுத்த பதினைந்து நிமிடத்திற்குள் அந்த ஆம்புலன்ஸை சேஸிங் செய்து மடக்கி பிடித்து போலீசார் திருவாடனை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.


"அந்த ஆம்புலன்ஸை விடுவிக்க ஒன்றிற்கும் மேற்பட்ட டிஎஸ்பி ராங்க் அதிகாரிகள் பேசியதும், வாகனத்திற்குள் இருந்த அவர்களின் தோற்றமும் எங்களுக்கு சந்தேகம் வலுக்கவே மடக்கி பிடித்து விசாரித்தோம். அந்த ஆம்புலன்ஸிற்குள் இருந்த பெண்ணின் பெயர் லதா(பெயர்மாற்றப்பட்டுள்ளது). உடனிருந்தது அவருடைய 11 வயது மகள் மற்றும் 8வயது மகனுமே.!!! சமீபத்தில் தான் அபுதாபியிலிருந்து சென்னைக்கு திரும்பியிருக்கின்றார்கள். சென்னை பம்மலில் உள்ள வீட்டில் இவர்கள் கரோனா தொற்றுக்காக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பி விராலிமலை வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸில் ராமநாதபுரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல முயன்றிருக்கின்றார். இதற்காக ஒவ்வொரு செக்போஸ்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் ஒரு டிஎஸ்பியின் பெயரைக் கூறி தப்பியிருக்கின்றார்.அது இங்கேயும் கூறப்பட இப்பொழுது சிக்கியுள்ளார். ஆம்புலன்ஸின் உரிமையாளர், டிரைவர் உட்பட அனைவரின் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது." என்கின்றனர் திருவாடனை போலீசார். மருத்துவப் பரிசோதனையின் முடிவில் பெண் குழந்தைகள் உட்பட மூவருக்கும் கரோனா தொற்று இல்லை எனினும் 28 நாள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்கண்காணிப்பில் இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எனினும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் அந்த டிஎஸ்பி பெயரைக் கூறி ஆம்புலன்ஸில் தப்பிக்க முயன்ற பெண் சென்னையிலிருந்து விராலிமலைக்கு வந்தது எப்படி..? சட்டத்தினை மீறி இவர்களுக்கு எதற்காக டிஎஸ்பி உதவவேண்டும்..? இன்னும் எத்தனை நபர்களை அவர் அனுப்பியிருக்கக்கூடும்..?" என பல கேள்விகளுடன் டிஎஸ்பியின் தரவுகளை ஆராய்ந்து வருகின்றது ராமநாதபுர மாவட்ட காவல்துறை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT