விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே திடீரென தந்தை இறந்ததால், செப்டம்பர் மாதம் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை இறந்த தந்தையின் உடல் முன்பு பெண்ணுக்கு தாலிக்கட்டி கரம் பிடித்த ஆசிரியரின் நெகிழ்ச்சி சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டிவனம் அடுத்த சிங்கனூர் பகுதியை சேர்ந்த தெய்வமணி - செல்வி ஆகியோரது மகன் அலெக்சாண்டர் இவர் மயிலம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisment

 Woman talisman teacher in front of dead father's body TINDIVANAM DISTRICT

Advertisment

இந்நிலையில் அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் மயிலம் அடுத்த கொணமங்கலத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் - அன்னபூரணி ஆகியோரது மகள் ஜெகதீஸ்வரி என்பவரை வரும் 02 -09-2019 அன்று மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டு பத்திரிக்கை அடிக்கும் பணி நடைபெற்று வந்தது.

 Woman talisman teacher in front of dead father's body TINDIVANAM DISTRICT

இந்நிலையில் அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணி நேற்று இரவு திடீரென்று காலமானார். இதனையடுத்து தனது தந்தை மீது கொண்ட மதிப்பு மற்றும் மரியாதையின் காரணமாகவும், அவர் மீது கொண்ட அளவற்ற பாசத்தின் காரணமாகவும், தனது தந்தை கையால் மாங்கல்யத்தை பெற்று திருமணம் நடைபெற வேண்டுமென விரும்பி தனது விருப்பத்தை தனது தாய் செல்வியிடமும், பெண் வீட்டாரிடமும் அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக பெண்வீட்டார் கொணமங்கலத்தில் இருந்து சிங்கனூருக்கு இன்று காலை வந்தனர். பின்னர் நண்பர்கள், உறவினர்கள் சூழ மாங்கல்யத்தை தனது தந்தையின் கரங்களால் பெற்று தனது வீட்டிலேயே திருமணத்தை முடித்துக் கொண்டார் ஆசிரியர் அலெக்சாண்டர். இந்த நெகிழ்வான சம்பவம் திண்டிவனத்தில் உள்ளஅனைத்து பகுதிகளுக்கும் இச்செய்தி பரவியதால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.