Advertisment

“என் கணவருக்கு எப்படி அபராதம் போடலாம்” - போலீசாரிடம் எகிறிய பெண் 

Woman swears at police because her husband was fined

Advertisment

பேருந்து நிலையத்திற்குள் தடையை மீறி நுழைந்தஇருசக்கர வாகனத்திற்கு அபராதம் விதித்தபோலீசாருடன் இளம்பெண் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிவைரலாகிவருகிறது.

திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள் நுழையத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இருசக்கர வானகத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் பேருந்து நிலையத்திற்கு வந்தவருக்குச் சோதனையிலிருந்த போலீசார்ரூ.1000 அபராதம் விதித்தனர்.

இந்த நிலையில் அவருடன் வந்த பெண் தனது கணவருக்கு அபராதம் விதித்ததைகண்டித்துபோலீசாருடன்கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் குழந்தை முன்புபோலீசார்உடையணிந்து வந்து நிற்பது தவறு என்று கூறி எப்படி எனது கணவருக்கு நீங்கள் அபராதம் விதிக்கலாம் என்று தகராறு செய்துள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில்படம் பிடித்து சமூகவலைத்தளங்களில்வெளியிட்டுள்ள நிலையில் தற்போதுவைரலாகிவருகிறது.

husband wife police thirupur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe