A woman stuck in the mud of Koovam river; an armed guard who extended help

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை பொக்லைன் உதவியுடன் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் சில நாட்களாக மழை பொழிந்து வந்தது. இந்நிலையில் கோயம்பேடு அருகே 40 அடி அகலமும் 15 அடி ஆழமும் கொண்ட கூவம் ஆற்றின் கால்வாய் பகுதியில் பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார். சேற்றில் சிக்கிக்கொண்ட அந்த பெண் அலறி கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisment

உடனடியாக அங்கு வந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் பொக்லைன் இயந்திரம் மூலம் பெண்ணை மீட்டனர். நடத்தப்பட்ட விசாரணையில் சிக்கிக் கொண்ட பெண்ணின் பெயர் தேவி என்பதும் சின்மயா நகரில் வீட்டு வேலை செய்து வந்ததாகவும், அப்பொழுது பணியை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்கின்ற பொழுது கால் வழுக்கி கூவம் ஆற்றில் சிக்கியது தெரியவந்துள்ளது.