ADVERTISEMENT

வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் தர்ணா போராட்டம்! பரபரப்பான மாநகராட்சி அலுவலகம்! 

10:34 AM Jan 29, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய 55 உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 10 வார்டுகளுக்கு ஒரு உதவித் தேர்தல் அலுவலர் என்ற வகையில் பிரிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், திண்டுக்கல் அருகே உள்ள கிழக்கு ஆரோக்கிய மாதா தெரு பகுதியைச் சேர்ந்த ஏஞ்சலின் ஒலிவியா தனது தந்தை அம்புரோஸ் உடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரின் பெயரும் 19வது வார்டில் உள்ளதாகவும், வேட்பாளராக போட்டியிடும் ஏஞ்சலின் ஒலிவியா என்னும் தனது பெயர் மட்டும் 32வது வார்டு பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் மாநகராட்சி தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியத்திடம் புகார் அளித்தார். புகாரை சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுக்க கூறியுள்ளார். அதையடுத்து வேட்பாளர் மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வேட்பாளரின் தந்தை கூறுகையில், “வேண்டுமென்றே எனது மகளின் பெயரை வேறு வார்டுக்கு மாற்றியுள்ளனர். எனது மகள் வெற்றி பெற்று மேயராக வந்துவிடுவார் என்ற பயத்தில் இது போன்று செய்துள்ளனர். இது தொடர்பாக புகாரை அதிகாரிகள் வாங்க மறுப்பதால் மீண்டும் வேட்பாளரின் பெயரை 19-வது வார்டுக்கு மாற்றாவிட்டால் நீதிமன்றம் செல்ல இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT