/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_3437.jpg)
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக் குழந்தையுடன்சபுர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்மணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருச்சி காந்தி சந்தை அடுத்த தனரத்தினம் நகரைச் சேர்ந்தவர் சபுர் நிஷா. இவரது அக்கா, தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி அழைத்ததின் பேரில்நிஷா தனது அக்கா வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அக்காவுக்கும்அக்கா குழந்தைக்கும் உதவியாக இருந்துள்ளார். அந்த வீட்டில் தங்கி உதவியாக இருந்த நிஷாவைஅவருக்குத்தெரியாமல்அக்கா கணவர் சையது முகமது அப்பாஸ்தனது செல்போனில் ஆபாசமாகப் படம் எடுத்துள்ளார்.
ஒருநாள், தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில்அந்தப் புகைப்படங்களை நிஷாவிற்கு அனுப்பிதனது வீட்டிற்கு வரும்படி நிஷாவை அழைத்துள்ளார். அதனைக் கண்டு பதறியடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்ற நிஷாவை மிரட்டிஅப்பாஸ் வன்புணர்வுசெய்துள்ளார். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில்இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
"எனது அக்கா கணவருக்குப் பயங்கரவாத அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பு இருப்பதாகத்தெரிகிறது. அவர் என்னையும், எங்களது மகனையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். எனக்குப் பயமாக இருக்கிறது. இதுகுறித்து திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும்அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பார் என்ற நம்பிக்கையில் வந்து இருக்கிறேன்" எனக் கூறிதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் கைக் குழந்தையுடன் நிஷா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)