
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே வீட்டு வாசலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்ட சோழவரம் அடுத்துள்ளது பூதூர் கிராமம். அங்கு வீடுகள் அமைத்திருந்த பகுதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் ஒன்றில் பீங்கான் பழுதடைந்திருந்தது. இந்தநிலையில் இன்று காலை கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது. வீட்டிலிருந்து வெளியே வந்த கனகா என்பவர் மின் கம்பியை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கனகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்க்கையில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கனகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின் ஊழியர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டதால் அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)