Woman speaks at TVk struggle at womens day

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற வரும் பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறையை கண்டித்து தமிழக வெற்றி கழகம் வேலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று.

Advertisment

அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மகளிர் அணியை சேர்ந்த ஒருவர், ‘தமிழகத்தில் தொடர்ந்து குற்றங்கள் நடைபெற்று வருகிறது. குற்றம் செய்யப்பட்டவர்கள் சிறைக்கு உள்ளே செல்கின்றனர், வெளியே வருகின்றனர், மீண்டும் உள்ளே செல்கின்றனர் வெளிய வருகின்றனர்.

Advertisment

இதனால் என்ன தீர்வு வரும்?. நாலு பேரு சுடுங்க, அப்பதான் குற்றம் செய்வது நிறுத்துவாங்க. இதையெல்லாம் தடுப்பதற்கு இந்த ஆட்சி இல்லை.2026ல நம்ம விஜய் ஆட்சி வரும் அப்பதான் இதெல்லாம் நடக்கும்’ எனப் பேசினார்.