Woman robbed of jewelry at knifepoint in her home

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொளத்துபாளையத்தை சேர்ந்தவர் மருதப்பன். இவரது மனைவி பார்வதி (55). இவர்கள் தோட்டம் ஆயப்பரப்பில் இருந்து சிவகிரி செல்லும் சாலையில் உள்ளது. சம்பவத்தன்று காலை 9 மணி அளவில் தோட்டத்தில் பார்வதி வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது பிரதான சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது.

அதில் இருவர் இருந்தனர். ஒருவர் மோட்டார் சைக்கிளில் தயார் நிலையில் இருந்தார். மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் இறங்கி பார்வதி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த நபர் பார்வதியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த அரை பவுன் கம்மலை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஏரி தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

Advertisment

இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தககவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பார்வதியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைக் காலமாகவே கொங்கு மண்டலத்தில் தனியாக தோட்டத்து வீட்டில் இருக்கும் வயதான தம்பதியரை குறித்து வைத்து குற்றசம்வங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.