Advertisment

தனிமையில் இருந்த வீடியோவை காட்டி... பெண் போலீஸ் மீது தொழிலதிபர் புகார்

Advertisment

கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்த கவிதா என்ற பெண் காவலருடன் தனிமையில் இருந்த சிசிடிவி காட்சிகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. கவிதாவும் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

சிசிடிவி காட்சிகள் வெளியாகியது குறித்து கோவை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து காவலர் கவிதா ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிசிடிவி விவகாரம் முடிவிற்கு வந்தது.

Advertisment

இந்த நிலையில் இன்று டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரை நேரில் அவரது அலுவலகத்தில் சந்தித்து புகார் அளித்தார். அப்போது, தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த மைதிலி என்பவர் மூலம்கவிதா என்ற பெண் காவலர் அறிமுகம் கிடைத்ததாகவும், அதன் பின் பெண் காவலருடன் பல இடங்களில் தனிமையில் இருந்து வந்ததாகவும், தனது அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியானதாகவும் தெரிவித்த அவர், இந்த வீடியோ பதிவுகளைக் காட்டி கவிதாவும், மைதிலியும் தன்னிடம் பணம் பறித்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

Coimbatore complaint kovai police Women
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe