Advertisment

அரசு மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்து பெண் பலி..!

Woman passes away in trichy government hospital

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்வதற்கு வந்த இளம்பெண் மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்த சம்பவம் நோயாளிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதுகுறித்து மருத்துவமனை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள இடையாற்றுமங்கலம் புது தெருவைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி ரேவதி வயது 29. இவர்களுக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் மூன்று குழந்தைகள் இருப்பதால் மேற்கொண்டு குழந்தைகள் வேண்டாம் என நினைத்து குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்ய ரேவதி முடிவு செய்து, நேற்று (11.02.2021) திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisment

அங்கு உள்ள கழிவறையில் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக கழிவறையில் வழுக்கி விழுந்ததில், அவரது பின்னந்தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷன் செய்வதற்காக வந்த பெண், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறையில் வழுக்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Government Hospital trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe