woman passes away in erode

ஈரோடு மாவட்டம், சென்னிமலை, முகாசிபிடாரியூர், கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (47). இவரது மகள் நந்தினி (27). இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன் எழுமாத்தூர், பாண்டிபாளையத்தைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடன் திருமணமானது. 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

Advertisment

இவர்கள் குடும்பத்துடன், சென்னிமலையை அடுத்த ஈங்கூர் ரோட்டில் உள்ள கருப்பணன் கோவில் பள்ளம் பகுதியில் வசித்து வந்தனர். குணசேகரனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இதனால், கணவன்மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 2 நாள்களாக குணசேகரன் வீட்டுக்கும் வரவில்லை எனச் சொல்லப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் வீட்டுக்கு வந்த கணவர் குணசேகரன் மது அருந்திவிட்டு தன்னிடம் தகராறு செய்வதாகத்தனது பெற்றோருக்கு போன் மூலமாக நந்தினி தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் ஆறுதல் கூறிய நிலையில், மீண்டும் மாலை 5.30 மணியளவில் நந்தினியின் பெற்றோருக்கு போன் செய்த அவரது கணவர் குணசேகரன், வீட்டின் மரச்சட்டத்தில் நந்தினி தூக்குப் போட்டுக் கொண்டதாகத்தெரிவித்துள்ளார்.

உடனடியாக நந்தினியின் பெற்றோர் அவரது வீட்டுக்குச் சென்று நந்தினியை தூக்கில் இருந்து இறக்கி, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே நந்தினி இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், சென்னிமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment