/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_110.jpg)
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள பாதிரிக்குப்பம் கிராமத்தின் அருகே இருக்கும் முந்திரி தோப்பில் ஒரு பெண்ணின் பிணம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், முத்தாண்டிகுப்பம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பாண்டியன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகப் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த பெண், பண்ருட்டி அருகே உள்ள செட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரது மனைவி கலையரசி (37) என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் தெரியவந்தது.
அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கலையரசியின் கணவர் அவரின் நடத்தையில் சந்தேகம்கொண்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்துவந்ததால், கணவர் மகேஷ் குடிக்கும் மதுவில் விஷம் கலந்து கணவரைக் கொன்றதும், மேலும் அந்த விஷம் கலந்த மதுவை கலையரசி கணவரின் நண்பர் கார்த்திக் என்பவரும் குடித்து இறந்துள்ளனர். இவ்விரு கொலை வழக்கில் கலையரசி கைது செய்யப்பட்டு சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில், கலையரசி முந்திரிக்காட்டில் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரின் தற்கொலை குறித்து பாண்டிகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)