woman passed away salem

Advertisment

சேலத்தில்தாலி கட்டாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணுக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்ததால், ஆத்திரத்தில் ஆட்டோ ஓட்டுநர்பெண்ணை துண்டால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (48). ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மனைவி மகாலட்சுமி.இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் சேலம் ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தபோது, அதே நிறுவனத்தில்வேலை செய்து வந்த ஷெகனாஸ் (48) என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் மனைவி, குழந்தைகளை மறந்த மாதேஸ்வரன்ஷெகனாஸுடன் தனியாக ஒரு வீட்டில் முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழத் தொடங்கினார்.

ஷெகனாஸுக்கு ஏற்கனவே திருமணமாகிகருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். அந்த நிலையில்தான் மாதேஸ்வரனுடன்பழக்கம் ஏற்பட்டுஅவர்களுக்குள் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. ஷெகனாஸுக்கு முதல் கணவர் மூலம் பிறந்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இது ஒருபுறம் இருக்க, ஷெகனாஸுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையறிந்த மாதேஸ்வரன் அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் ஷெகனாஸ் அந்த இளைஞருடன் உறவைத்தொடர்ந்து வந்தார்.

Advertisment

இதையடுத்து மார்ச் 18ம் தேதி ஷெகனாஸ் வீட்டுக்குச் சென்ற மாதேஸ்வரன் அவரை மீண்டும் கண்டித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மாதேஸ்வரன் ஷெகனாஸின் கழுத்தை துண்டால் நெரித்துக் கொலை செய்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் மூலம் தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர்நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக்கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாதேஸ்வரனை தேடி வந்த நிலையில், அவரேகாவல்நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.