சகோதரனுடன் சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Woman passed away in road accident

வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவர் காட்பாடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலூர் - காட்பாடி சாலையில் அஸ்வினி தனது சகோதரருடன் இரு சக்கர வாகனத்தின் பின் புறத்தில் அமைர்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில், சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதாமல் இருக்க, அவரது சகோதரர் பிரேக் பிடித்துள்ளார்.

அப்போது சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக பின்னே வந்த மாநகராட்சி தண்ணீர் லார் அஸ்வினி தலையில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த வேலூர் வடக்கு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

accident police woman
இதையும் படியுங்கள்
Subscribe