woman passed away in puthukokttai police investigation on process

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள தெற்கு பல்லவராயன்பத்தை கிராமத்தைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவரின் மனைவி பழனியம்மாள் (35). 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். திருச்செல்வம் வெளிநாட்டில் உள்ளதால் பழனியம்மாள் காக்கைக்கோன்விடுதி கிராமத்தில் உள்ள தனது தந்தை தங்கவேல் வீட்டில் தங்கியிருந்து கறம்பக்குடியில் உள்ள ஒரு பேன்சி ஸ்டோரில் வேலை செய்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், கடந்த 23ம் தேதி மாலை கடையிலிருந்து தனது கணவர் வீட்டிற்குச் செல்வதாக கூறிச் சென்ற பழனியம்மாள், வீட்டிற்கு செல்லவில்லை என்று, அவரது தந்தை தங்கவேல் கறம்பக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலிசார் சந்தேக நபர்கள் பற்றிய விபரங்களையும் சேகரித்து விசாரணை செய்து வந்தனர்.

Advertisment

woman passed away in puthukokttai police investigation on process

இந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பல்லவராயன்பத்தை கிராமத்தில் பழனியம்மாள் வீட்டிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் காட்டுப்பகுதியில் மேலாடைகள் களையப்பட்ட நிலையில், அழுகிய சடலமாக பழனியம்மாள் மீட்கப்பட்டார். 4 பெண் குழந்தைகளின் தாயான பழனியம்மாளைக் கொலை செய்து காட்டுப்பகுதியில் வீசியுள்ளனர். கொலையாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு புதுப்பட்டி கிராமத்தில், புதுக்கோட்டை - கறம்பக்குடி சாலையில் உறவினர்கள் சாலைமறியல் செய்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.