திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் வங்கியில் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வந்தவர் சுமதி(37). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சமயபுரம் பகுதியில் உள்ள வாடிக்கையாளரைச் சந்தித்து விட்டு மீண்டும் வங்கிக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி பேருந்து ஒன்று வந்து, சுமதியின் மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் கல்லூரி பேருந்தின் சக்கரம் அவர் தலைமீது ஏறியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.