/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/crime_16.jpg)
அரியலூர் மாவட்டம், சித்துடையார் என்ற கிராமத்தில் உள்ள சுடுகாட்டுப் பகுதியில் ஒரு பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை அப்பகுதிக்கு ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த தளவாய் போலீசார், அந்த சுடுகாட்டுப் பகுதிக்கு சென்று அந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்த அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் வேள்வி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மகள் மூக்காயி என்பது தெரியவந்தது. திருமணமான ஆறு மாதத்தில் இவரது கணவர், இவரை தனியேவிட்டு சென்றுதும், தற்போது இவருக்கு ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளார்.
இவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் வறுமையின் காரணமாக இவரது தாயார் வெள்ளையம்மாள், சகோதரி ஆகியோர் கோவை பகுதிக்கு பிழைப்பு தேடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு அவரது சித்தப்பா சின்னத்துரை என்பவர் உணவளித்து காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில், மூக்காயி அவரது ஊரிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சித்துடையார் சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் இருந்துள்ளார். மேலும் இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)