திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணின் (60). இவர், மனைவி தேவிகா(55). இவர்கள் மேட்டுபாளையம் என்ற கிராமத்தில் டீ கடை நடத்தி வருகிறார்கள். வழக்கம் போல் அவரது மனைவி தேவிகா கடந்த 2ஆம் தேதி டீ கடையில் மண்ணெணய் அடுப்பை பற்றவைக்க முயன்றுள்ளார். ஆனால் அடுப்பு பற்றாததால், அருகில் இருந்த கேஸ் அடுப்பை பற்றவைத்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீக்குச்சியை மண்ணெணய் அடுப்பின்மீது தூக்கி எரிந்துள்ளார். அது உடனடியாக தீப்பற்றியது. அதேசமயம், அந்த அடுப்பின் அருகில் நின்றுகொண்டிருந்த தேவிகாவின் மீதும் தீப் பற்றியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து தேவிகாவை தீக்காயங்களுடன் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபகமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த தாத்தயங்கார்பேட்டை காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுப்பு பற்றவைக்கும் போது நேர்ந்த விபரீதம்!
Advertisment