Advertisment

தாயின் உயிரைப் பறித்த மகளின் காதல் - ராஜபாளையத்தில் சோக சம்பவம்

Woman passed away in love issue

தென்காசி மாவட்டத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன் தன்னுடைய குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்துரைராஜ் இவரது மனைவி தமிழரசி. தமிழரசி தன் பிள்ளைகளானகிருஷ்ணகுமார்,கிருஷ்ணபிரியா, கிருஷ்ணபிரபா ஆகிய மூவருடன் வசித்து வருகிறார்.

Advertisment

கிருஷ்ணபிரபாராஜபாளையம், அழகை நகரிலுள்ள கார்மென்ட்ஸில் பணிபுரிகிறார். அவர், தெற்கு மலையடிப்பட்டியில் உள்ள தனது சமூகத்தைச் சேர்ந்த தங்கமாரியப்பன் என்பவருடன் பழகி வந்திருக்கிறார். இதையறிந்த தமிழரசி, மகள் கிருஷ்ணபிரபாவை கண்டித்துள்ளார். ஆனாலும், அந்தப் பழக்கத்தை கிருஷ்ணபிரபா கைவிடாமல் தொடர்ந்திருக்கிறார்.

Advertisment

இதனால், மன வருத்தம் அடைந்த தமிழரசி தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மகன் கிருஷ்ணகுமார் அளித்த தகவலின் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் தற்கொலை வழக்குப் பதிவாகியுள்ளது.

police Rajapalayam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe