woman passed away in liquor

நாகை மாவட்டம், திருக்குவளை, அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி கோமதி, வயது 45. கணவன், மனைவி இருவருக்குமே குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் தீபாவளியன்று கணவன், மனைவி இருவரும் சேர்ந்து மது அருந்திவிட்டுகுண்டையூர் செல்லும் பாலம் அருகில் செல்லும்போதுபோதை உச்சமாகி அதே இடத்தில் இருவரும் நிதானமின்றி கிடந்துள்ளனர்.

Advertisment

போதைத்தெளிந்து விழித்துப் பார்த்த சேகருக்கு ஒரே அதிர்ச்சி. அருகில் கிடந்த தனது மனைவி கோமதியைக் காணவில்லை என அங்கேஇங்கே ஓடிசத்தமிட்டு தேடியுள்ளார். இரண்டு நாட்களாக எங்கு தேடியும் அவரது மனைவி கிடைக்காத நிலையில்இன்று காலை சந்திரநதியில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisment

அதனைப் பார்த்ததும் அந்த பெண்‌ சேகரின் மனைவி கோமதி என்பது தெரியவந்தது. உடலைக் கைப்பற்றியபோலீசார் பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர்பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இது குறித்து திருக்குவளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.