woman missing trichy govt hospital

Advertisment

திருச்சி லால்குடி சிறுமயங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கற்பகம்(35). திருமணம் ஆகாத தனது அத்தை ஜெயந்தியை அழைத்துக்கொண்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக மருத்துவ ஆலோசனை பெற வந்துள்ளார். மருத்துவரை சந்தித்த பின்பு அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை கற்பகம் வாங்கியுள்ளார். பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியே நடந்து சென்றபோது அவ்வழியாக டூவீலரில் வந்த ஒரு இளைஞரை நிறுத்தி, தனது அத்தை ஜெயந்திபஸ் ஸ்டாப்பில் இறக்கி விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த இளைஞரும் ஜெயந்தியை, தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அரசு மருத்துவமனை பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து சென்று கற்பகம் அங்கு ஜெயந்தியை தேடியுள்ளார். ஆனால் அங்கு ஜெயந்தியை இல்லாததால் அக்கம் பக்கத்தில் விசாரித்தபோதும் ஜெயந்தி குறித்து எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து போலீசாரிடம் கற்பகம் புகாரளித்தார். அதன் பேரில் நடத்திய விசாரணையில் ஜெயந்தி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் ஜெயந்தி கடத்தப்பட்டாரா அவரை பைக்கில் ஏற்றி சென்ற மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.