Advertisment

பழைய கட்டடத்தை இடிக்கும் பொழுது பெண் உயிரிழந்த சம்பவம்; ஒப்பந்ததாரர் கைது 

nn

Advertisment

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில்பழைய கட்டடத்தை இடிக்கும் பொழுது பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கட்டடத்தை இடிக்க ஒப்பந்தம் பெற்றவரைபோலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு அண்ணாசாலை அருகே ஒரு பழைய கட்டடம் ஒன்றை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது உட்புறமாக இருந்துகொண்டு அந்த கட்டடத்தை இடிக்கும் போது வெளிப்புறமாக இருந்த சுவர் இடிந்து விழுந்தது.அப்போது அந்த வழியாக நடைபாதையில் சென்று கொண்டிருந்த இரண்டு பெண்கள் மீது சுவர் இடித்து விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இடிபாடுகளில் சிக்கியிருந்த இரு பெண்களையும் மீட்டதீயணைப்புத்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் படுகாயமடைந்த தனியார் நிறுவன ஊழியர் ப்ரியா என்பவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆயிரம் விளக்கு போலீசார், கட்டடத்தின் உரிமையாளர் மற்றும் கட்டடம் இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நான்காவது நபராககட்டடத்தை இடிக்க ஒப்பந்தம் பெற்ற அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்துள்ளனர்.

incident Chennai police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe