பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் கீழே இறங்கியவுடன் நடந்து சென்ற பொழுது அவர் பயணித்த பேருந்தே அவர் மீது ஏறி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் தான் பயணித்த தனியார் பேருந்தில் இருந்து இறங்கிய ஷாஷாபின் என்ற பெண் நடந்து சென்றார். அப்பொழுது பேருந்து முன்பு நடந்து சென்றபோது தனியார் பேருந்து ஓட்டுநர் அப்பேருந்தை இயக்கியுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஷாஷாபின் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த காட்சிகள் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.