woman lost their life police arrested her boyfriend

காதலி தூக்கிட்டுதற்கொலை செய்துகொள்வதைப் பார்த்து காதலன் ரசித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சீர்காழியை அடுத்துள்ள மருதூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். தனது வேலை காரணமாக தன்னுடன் பணிபுரியும் பெண்ணுடன் சேர்ந்து நன்னிலத்தில் வீடு எடுத்து தங்கி பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி மதிய உணவு இடைவேளையின் போது வீட்டுக்குச் சென்ற அவர் தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இளம்பெண் தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

இது குறித்தவிசாரணையின் போது, பெண்ணின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சத்யராஜுடன் வீடியோ கால் பேசி இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், “உயிரிழந்த இளம்பெண்ணும், நாகை மாவட்டம் வடகாடு பஞ்ச நதிக்குளம் பகுதியைச் சேர்ந்த சத்தியராஜும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சத்யராஜுக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் தனது காதலர் சத்யராஜுக்கு வீடியோ கால் செய்து பேசியுள்ளார்.

அப்போது இருவருக்கும் ஏற்பட்டதகராற்றின் போது,தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத்தெரிவித்துள்ளார் அந்தப் பெண். அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சத்யராஜ், பெண்ணின் முடிவுக்கு சரி என்று சொல்லியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது” என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சத்யராஜ் மீது தற்கொலைக்குத்தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

Advertisment