Advertisment

பள்ளி சென்று திரும்பிய மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி; தாய் எடுத்த விபரீத முடிவு

Woman lost their life  in family dispute

ஈரோடு, சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு, குமரன் நகரைச் சேர்ந்தவர் சாந்தி (33). இவரது கணவர் சரவணன் (44). உறவினர்களான இருவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சாந்தி, ஈரோட்டில் உள்ள பிரபல துணிக் கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். சரவணன் சரி வர வேலைக்குச்செல்லாமல், வீட்டைக்கவனிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால், குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் சமீப காலமாக சாந்தி மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், நேற்று மாலை சாந்தியின் மகன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு உள்பக்கமாகத்தாழிடப்பட்டிருந்துள்ளது. வெகு நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, ஃபேன் மாட்டும் கொக்கியில்தூக்கிட்ட நிலையில் சாந்தி தொங்கியவாறு இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே சாந்தி இறந்துவிட்டதாகத்தெரிவித்தார். இதுகுறித்து, ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisment

school woman Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe