/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_240.jpg)
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கரியானூர், காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சந்திரமதி என்பவரின் மகள் கிருத்திகா (20). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன் ஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில நாள்களாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாகத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போது பெற்றோர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி கணவன்மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், கிருத்திகா, வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தின்று விட்டார். உடனடியாக அவரை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருத்திகா, சிகிச்சை பலனின்றி நேற்றுஉயிரிழந்தார். இதுகுறித்து, ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)