Woman leaves baby at Trichy railway station

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் அறைக்கு அருகில் நேற்று இரவு இரண்டரை வயது பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது.இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு பெண் காவலர்கள் குழந்தையை மீட்டனர்.

Advertisment

நீண்ட நேரமாகியும் பெற்றோர் யாரும் குழந்தையைத் தேடி வராததால் அந்தப் பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.அதில் சுடிதார் அணிந்த ஒரு பெண், அந்தக் குழந்தையை விட்டுச் சென்றது தெரியவந்தது. பின்னர் அந்தக் குழந்தையை 'குழந்தைகள் உதவி மையம்' நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.மேலும், குழந்தையை விட்டுச்சென்ற அந்த சுடிதார் அணிந்த பெண்ணை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.