Woman killed

Advertisment

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோட்டகுப்பம் ஈ.சி.ஆர். புறவழிச்சாலை அருகே ஒரு பெண் கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க உள்ள அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? இல்லை இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.