/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_4997.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் மார்த்தாண்டம். இவர் சென்டரிங்வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவி (26 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். கவி கடந்த 25-ம் தேதி காவேரிப்பட்டணத்திலிருந்து தனது தாய் வீடான ஜோலார்பேட்டையில் உள்ள இடையம்பட்டிக்கு வந்துள்ளார்.
நாட்றம்பள்ளியில் பஸ்ஸில் இருந்து இறங்கி ஆட்டோவிற்காக காத்திருந்தபோது காக்கங்கரை பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் காரில் வீட்டில் விடுவதாக கூறி உள்ளார். கவி காரில் ஏரியுள்ளார், கார் ஜோலார்பேட்டைக்கு செல்லாமல் திருப்பத்தூர் வீட்டுவசதி வாரியம் பகுதியில் உள்ளதனது வீட்டிற்கு கவியை அழைத்து சென்று அறையில் வைத்து பூட்டி வைத்து சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது.
பெண் மாயம் ஆனதாக உறவினர்கள் தேடியபோது, கவி கைபேசியில் இருந்து மெசேஜ் வந்தது. அதன் பிறகு கவியின் பெற்றோர்களுக்கு சக்தி என்பவர் கடத்தி சித்திரவதை செய்து மூன்று நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என கவி கூறியுள்ளார். பின்னர் பெற்றோர்கள் கவியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
கடத்தி சித்ரவதை செய்த சக்திவேல் மற்றும் கதிர்வேல் மீது நடவடிக்கை எடுக்க எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் 2 லட்சம் பணம் கடனாக வாங்கியதற்கு தற்போது 15 லட்சம் தரவேண்டும் என கோரி தான், தற்போது கடத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமகாவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணத்திற்காக பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)