நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமியை இணைத்து ஆபாசமாக சமூகவலைதளத்தில் பதிவு செய்த பெண்ணை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisment

The woman is jailed for making controversy about actor vishal

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் அவரது பள்ளி செல்லும் மகளை நடிகர் விஷாலுடன் தொடர்புபடுத்தி ஆபாசமான படங்களையும், அவதூறு கருத்துக்களையும் சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் விஷ்வ தர்சினி என்ற பெண். இது குறித்து சிறுமியின் தாயார் ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சைபர் கிரைம் போலீசார் அந்த பெண் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அதனை அடுத்து விஷ்வதர்ஷினி தலைமறைவானார். இந்நிலையில் விஷ்வ தர்சினி திருச்செங்கோட்டில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் அங்கு சென்று கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். சென்னை கொண்டுவரப்பட்ட அவர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.