Woman incident while talking on cell phone while charging

சார்ஜ் போட்டுக்கொண்டே செல்போனில் பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விசித்திர ராஜபுரத்தைச்சேர்ந்தவர் கோகிலா (வயது 33). இவரது கணவர் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில், தனது 9 வயது மகனுடன் வசித்து வந்தார்.கபிஸ்தலத்தில் கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கோகிலா இன்று தனது கடையில், செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டேபோன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துச் சிதறியுள்ளது.

Advertisment

இதனால் கடை முழுவதும் தீப்பற்றி எறிந்த நிலையில்,கோகிலா கத்திக் கூச்சலிட்டுள்ளார். அதே சமயம்கடை முழுவதும் தீ பரவியதால் பலத்த தீக்காயமடைந்த கோகிலா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோகிலாவின் உடலைக் கைப்பற்றிய போலீசார்பாபநாசம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே போன் பேசியபோது செல்போன் வெடித்து இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.