அரியலூர் அருகே பட்டப்பகலில் பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியலூர் மாவட்டம்வெங்கனூர்கிராமத்தைச் சேர்ந்தராசாத்திஎன்பவரின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில், ராமகிருஷ்ணன் என்றநபரைஇரண்டாகதிருமணம் செய்துராசாத்திவாழ்ந்து வந்தார். அவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தனிமையில் வசித்து வந்தராசாத்திகூலிவேலைகளுக்குசென்று வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், வயல் வேலைக்குச் சென்று மாலையில்வீடு திரும்பும் பொழுது சில மர்ம நபர்கள் சாலையிலேயேராசாத்தியைவெட்டிப்படுகொலை செய்தனர். இது தொடர்பாகபோலீசருக்குதகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்தபோலீசார்உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார்நடத்திய முதற்கட்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் நாகராஜ் என்றநபரைகைது செய்துள்ளனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் எனபோலீசார்சந்தேகித்து, அது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.