Skip to main content

பெண் விடுதி காவலாளி மரணம்... கொலையா? தற்கொலையா? உறவினர்கள் போராட்டம்!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த ஓச்சேரி பகுதியிலிருந்து செயல்படும் சப்தகிரி தனியார் கல்லூரியில் பெண்கள் விடுதியில் பெண் விடுதி காவலாளியாக பணிபுரிந்தவர் மாமண்டூர் பகுதியை சேர்ந்த 46 வயதான சரஸ்வதி.

இந்த நிலையில் அக்டோபர் 21 ந்தேதி இரவு காவலாளி பணிக்கு வந்த அவர் கல்லூரியிலிருந்து இன்று அக்டோபர் 22 ந்தேதி காலை வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டும் போன் எடுக்கவில்லை. கல்லூரிக்கு செல்லும் மாமண்டூர் சாலையில் மர்மமான முறையில் சரஸ்வதி இறந்து கிடக்கிறார் என தகவல் பரவியது.

 

 Woman hostel incident...Relatives struggle!


இந்த தகவல் சரஸ்வதி உறவினர்களுக்கும் சொல்லப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு உறவினர்கள் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் காவேரிப்பாக்கம் போலீசார் பிரேத பரிசோதனை முடிந்து பின் சரஸ்வதியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

சரஸ்வதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என முதல்கட்ட தகவல் வெளியானது. இது நம்பும்படியாகயில்லை எனச்சொல்லி இரவு 8 மணி முதல், சரஸ்வதியின் உறவினர்கள் கல்லூரி வளாகத்தின் முன் உடலை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இறந்த சரஸ்வதிக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், அது தற்கொலையா? கொலையா என கண்டறிய வேண்டும் என்றும் , காரணம் என்னவென கண்டுபிடிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்