(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கொடைக்கானல் அருகே புதரில் மறைந்திருந்த காட்டெருமைகள் தாக்கிபெண் கூலி தொழிலாளி இறந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் கூளத்தூர்அருகே பெண் கூலி தொழிலாளியான காமுக்காகாட்டில் கூலி வேலை செய்து கொண்டிருந்தபோது புதரில் ஒளிந்திருந்த காட்டெருமை தாக்கி பலியானார்.
வனவிலக்குகளால் மக்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து அப்பகுதி மக்கள் ஏற்கனவே வனத்துறையினருக்கு தெரிவித்திருந்த போதிலும் இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி நடப்பதால் இதற்கு தீர்வு வேண்டும் என இறந்த பெண்ணின் உடலுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டெருமை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.