the woman who handed over the jewelry to her parents in the presence of the police

Advertisment

திருச்சி முத்தரசநல்லூர்பகுதியைச் சேர்ந்த யோகலட்சுமி (21) என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ரவிச்சந்திரன் (23) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் காதல் விவகாரம் யோகலட்சுமி பெற்றோர்களுக்குத் தெரியவந்ததால் அவர்களது உறவுக்காரர் பையனுக்குத் திருமணம் செய்துகொடுக்க நிச்சயம் செய்ய இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த யோகலட்சுமி, பெற்றோர் தங்களைப் பிரித்துவிடுவார்களோ என்று பயந்து ரவிச்சந்திரனுடன் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலில் மாலை மாற்றித் திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து, பாதுகாப்பு கேட்டு சமயபுரம் காவல் நிலையத்தில் காதலர்கள் தஞ்சமடைந்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தியதில், யோகலட்சுமி தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, கணவருடன்தான் செல்வேன் என்று கூறினார். மேலும், தான் அணிந்திருந்த தங்கச் செயின், தோடு, கொலுசு ஆகியவற்றைக் கழட்டி போலீசார் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் யோகலட்சுமியை ரவிச்சந்திரனுடன் அனுப்பிவைத்தனர்.