Advertisment

திடீர் இடியுடன் கூடிய கனமழை; பரிதாபமாக பெண் பலி

woman grazing goats near Sholingur was struck by lightning and lost her life

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Advertisment

குறிப்பாக ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, சோளிங்கர், ஆற்காடு, காவேரிப்பாக்கம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது, இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், திடீர் இடியுடன் கூடிய மழை காரணமாக சோளிங்கர் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தேவிகா என்ற பெண் இடி தாக்கி உயிர் இழந்தார். அதேபோல் சோளிங்கர் அருகே மருதாளம் பகுதியில் தினேஷ் என்பவருக்கு சொந்தமான பசு மாடு இடி தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

rain woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe