Woman got injured by her husband

நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள தொழுதூர் உச்சிமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 27ம் தேதி நாகை அருகே ஆலத்தம்பாடி தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

Advertisment

அன்றிரவு நடந்த சம்பிரதாயத்தில், மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை, பாலியல் தொல்லை கொடுத்து கொடூரமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அச்சத்தில் உறைந்த அந்தப் பெண், அங்கே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில், தனது மகளுக்கு தாலி கட்டிய ராஜ்குமார், அவருடன் தனிமையில் இருந்தபோது மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட, பாலியல் வன்கொடுமையால் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்படுத்திய புதுமாப்பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுப்பெண்ணின் தாயார் பரமேஸ்வரி நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று உறவினர்களுடன் வந்து புகார் அளித்துள்ளார்.