
திருப்பூர் தாராபுரம் சாலையில் இன்று காலை சுமார் 8 மணி அளவில் கால்வாயில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று சந்தேகப்படும் வகையில் கிடந்ததைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்த பொழுது சூட்கேசுக்குள் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் ஒன்று இருந்தது. உடனடியாக பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பெண் யார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)