Advertisment

கடலூர் அருகே கோயிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் சடலம்...

crime

Advertisment

கடலூர் அருகே கோயில் ஒன்றில் பெண் மர்மமான முறையில்கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.

வடகாராம் பூண்டியைச்சேர்ந்த அழகுவேல் மனைவி கருப்பாயி(42). கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இவரின் கணவர் இறந்து விட்டார். பக்கத்து ஊரான கீழக்கல்பூண்டியில் ஒரு ஹோட்டலில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும் மேலக்கல்பூண்டியைச்சேர்ந்த தச்சுத் தொழிலாலியான சுப்பிரமணியன் என்பருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கம் இருந்து வந்துள்ளது. நேற்று முதல் நாள் வழக்கம் போல் கருப்பாயி ஹோட்டல் வேலைக்குச் சென்று விட்டு, இரவு வீட்டிற்கு உணவு பார்சல் கட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

அன்று இரவு மேலக்கல்பூண்டி ஏரிக்கரையில் அருகே அமைந்துள்ள அய்யனார் கோயிலில் தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு ராமநத்தம் போலீசார் மற்றும் விருத்தாசலம் டி.ஸ்.பி. இளங்கோவன் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர்.கருப்பாயி தலையில் ஒரு இடத்தில் ஆழமாகக் காயம் இருந்துள்ளது. இதனால் தகாத உறவில் இருந்த சுப்பிரமணியன் கொலை செய்திருக்கலாமா அல்லது வேறு யாராவது கொலை செய்திருக்கலாமா என விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜீன் வரவழைக்கப்பட்டு சம்ப இடத்தை மோப்பம் பிடித்துச் சிறிது தூரம் சென்றும் தடயம் எதையும் கண்டறியவில்லை. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Cuddalore crime
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe