Skip to main content

கடலூர் அருகே கோயிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் சடலம்...

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

crime

 

கடலூர் அருகே கோயில் ஒன்றில் பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது.

 

வடகாராம் பூண்டியைச்சேர்ந்த அழகுவேல் மனைவி கருப்பாயி(42). கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இவரின் கணவர் இறந்து விட்டார். பக்கத்து ஊரான கீழக்கல்பூண்டியில் ஒரு ஹோட்டலில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும் மேலக்கல்பூண்டியைச்சேர்ந்த தச்சுத் தொழிலாலியான சுப்பிரமணியன் என்பருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கம் இருந்து வந்துள்ளது. நேற்று முதல் நாள் வழக்கம் போல் கருப்பாயி ஹோட்டல் வேலைக்குச் சென்று விட்டு, இரவு வீட்டிற்கு உணவு பார்சல் கட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

 

அன்று இரவு மேலக்கல்பூண்டி ஏரிக்கரையில் அருகே அமைந்துள்ள அய்யனார் கோயிலில் தலையில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு ராமநத்தம் போலீசார் மற்றும் விருத்தாசலம் டி.ஸ்.பி. இளங்கோவன் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். கருப்பாயி தலையில் ஒரு இடத்தில் ஆழமாகக் காயம் இருந்துள்ளது. இதனால் தகாத உறவில் இருந்த சுப்பிரமணியன் கொலை செய்திருக்கலாமா அல்லது வேறு யாராவது கொலை செய்திருக்கலாமா என விசாரணை செய்து வருகின்றனர்.

 

கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜீன் வரவழைக்கப்பட்டு சம்ப இடத்தை மோப்பம் பிடித்துச் சிறிது தூரம் சென்றும் தடயம் எதையும் கண்டறியவில்லை. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.