/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_67.jpg)
சிதம்பரம் கீழவீதியில்மாலன் ஜுவல்லரி நகைக்கடை உரிமையாளரான மங்கேஷ்குமார் மனைவி சுபாங்கி(47). இவர் இன்று காலை கார் கற்றுக் கொள்வதற்காக உறவினருடன் காரில் சிதம்பரத்திலிருந்து தெற்கு பிச்சாவரம் வரை காரை ஓட்டி சென்றார்.
இந்நிலையில் தெற்கு பிச்சாவரம் அருகே உள்ள பாலம் அருகே சென்று விட்டு மீண்டும் சிதம்பரம் நோக்கி காரை சுபாங்கி ஓட்டிவந்துள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள உப்பனாற்றுக்குள் பாய்ந்து உள்ளே விழுந்து விட்டது. உடனே அவரது உறவினர் ராம்தேவ்காரில் இருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் காருக்குள் சுபாங்கி மட்டும் மாட்டிக்கொண்டார். இதில் கார் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. இதில் சுபாங்கி சம்பவ இடத்திலேயே காருக்குள் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்புத்துறை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுகாருக்குள்இருந்த சுபாங்கியைக்கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவரது உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்கு வைக்கப்பட்டுள்ளது. கார் கற்றுக் கொள்ளும் போது ஆற்றில்மூழ்கி பெண் பலியான சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)